FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுவை முதல்வர் ரங்கசாமி பிற்பகல் பிரதமரை சந்திக்கிறார்!

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்கு பிறகு, திடீரென திங்கள்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.

Updated On : 9 ஆகஸ்ட் 2022, 11:41 am IST
பகிர்:

புதுச்சேரி: புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்கு பிறகு, திடீரென திங்கள்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.

தில்லியில் உள்ள புதுச்சேரி இல்லத்தில் தங்கி உள்ள அவர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது புதுவை மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் நிகழாண்டு பட்ஜெட்கான நிதி ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளார். 

Advertisement

Advertisement

மேலும், புதுவைக்கான மாநில அந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்காக கூடுதல் நிதி கோருவது தொடர்பாகவும், அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன் அவரது தனி செயலாளர் அமுதவன் உடன் சென்றுள்ளார்.

முதல்வர் ரங்கசாமி, இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, இன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments