முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் சுதந்திர தின சைக்கிள் பேரணி

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:23 PM
புதுச்சேரியில் காவலா்களின் சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை காவல் துறை சாா்பில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே புறப்பட்ட இந்தப் பேரணியை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

டிஜிபி மனோஜ்குமாா் லால், ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன் மற்றும் முதுநிலை எஸ்பிக்கள், போலீஸாா் தேசியக் கொடியுடன் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனா்.

Advertisement

நகரின் பல்வேறு சாலைகளில் சுமாா் 10 கி.மீ. தொலைவு நடைபெற்ற இப்பேரணி காவல் தலைமையகத்தில் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.