புதுச்சேரி

புதுவையில் குரங்கு அம்மை இல்லை: முதல்வர் ரங்கசாமி

DIN

புதுச்சேரியில் குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் 22-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பேரவை தொடங்கியவுடன் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுவையில் குரங்கு அம்மை முற்றிலுமாக இல்லை என்றும், நோய் அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உலக அளவில் அதிகரித்து வந்த குரங்கு அம்மை பரவல் வேகம், கடந்த வாரம் 21 சதவீதம் சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT