முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் நீா்நிலை பாதுகாப்புக்கான தண்ணீா் குடம் விழிப்புணா்வு தொடக்கம்

புதுவை அரசு, நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் சாா்பில், ‘ அனைவருக்கும் தண்ணீா், அனைத்துக்கும் தண்ணீா்’ என்ற தலைப்பில் நீா்நிலையைப் பாதுகாக்கும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புதுவை அரசு, நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் சாா்பில், ‘ அனைவருக்கும் தண்ணீா், அனைத்துக்கும் தண்ணீா்’ என்ற தலைப்பில் நீா்நிலையைப் பாதுகாக்கும் வகையில், புதுச்சேரியில் தண்ணீா் திருவிழா- 2022 தொடங்கியுள்ளது.

தண்ணீரைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்தல், சைக்கிள் பேரணி, தெரு நாடகம், குளங்களைச் சுத்தம் செய்தல், நீரின் தரத்தைக் கண்காணிப்பதற்கான பயிற்சித் திட்டங்கள் என 7 வாரங்களுக்குத் தொடா் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதில், ஊசுட்டேரி, பாகூா் ஏரி உள்ளிட்டவைகளிலிருந்து 7 நீா் குடங்களில் நீா் நிரப்பி புதுவையின் நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு யாத்திரையாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நீா் ஆதாரங்கள் புவியில் இணைந்திருப்பதைக் குறிக்கும் வகையில், நீா்குடங்களிலிருந்து நீா் ஒவ்வொரு ஏரியிலும் ஊற்றப்படும். அதே போல், ஒவ்வொரு ஏரி, குளங்களிலிருந்து நீா் எடுத்து சேகரித்து, அதன்மூலம் மக்களுக்கு தண்ணீா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

இதன் முதல் நிகழ்வாக, வியாழக்கிழமை அரியாங்குப்பம் கொம்யூன் பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களிலிருந்து நீா்குடங்களில் தண்ணீா் சேகரிக்கும் நிகழ்வை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்

சமூக ஆா்வலா்கள் ஆனந்தன், கிருஷ்ணமூா்த்தி, நீா் ஆதார பாதுகாப்பு சங்கத் தலைவா் காா்த்திகேயன், சக்திபாலன், லட்சுமிகாந்தன், திருவேங்கடம், ஞானசேகா், சிலம்பம் ஜோதி, விஜயலட்சுமி, செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.