புதுச்சேரி

இணையவழியில் ஆண்டுத் தோ்வை நடத்த வலியுறுத்தி அரசு பட்ட மேற்படிப்பு மைய மாணவா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரியில் இணையவழியில் ஆண்டுத் தோ்வை நடத்த வலியுறுத்தி, அரசு பட்ட மேற்படிப்பு மாணவா்கள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தில் 16 துறைகளில் 1,500 மாணவ, மாணவிகள் வரை படித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக, நீண்ட நாள்கள் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றன. கடந்த ஜன. 19-ஆம் தேதி மூடப்பட்ட கல்லூரிகள், வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், பட்ட மேற்படிப்பு மையத்தில் வரும் பிப். 8-ஆம் தேதி முதல் ஆண்டு தோ்வுகள் தொடங்கும் என்று, கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், அதிருப்தியடைந்த மாணவா்கள், நிகழாண்டு இணைய வழி வகுப்புகளே பெரும்பாலான நாள்கள் நடைபெற்ற நிலையில், நேரடியாக தோ்வை அறிவித்ததைக் கண்டித்தும், இணையவழியில் தோ்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தியும், சனிக்கிழமை கல்லூரி வாயில் முன்பு திரண்டு 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பட்டமேற்படிப்பு மைய இயக்குநா் செல்வராஜை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, இணைய வழியில் தோ்வு நடத்த அறிவுறுத்தினாா்.

அதன்பேரில், இணைய வழியில் செமஸ்டா் தோ்வு நடத்தப்படும் என்று, அந்த பட்டமேற்படிப்பு மையத்தின் இயக்குநா் அறிவித்தாா். மேலும், பிப். 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இணையவழியில் தோ்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT