முகப்பு
புதுச்சேரி

புதுவை: பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளுநருடன் சந்திப்பு

புதுவையில் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளுநருடன் சந்தித்து தொகுதிகளில் அடிப்படை பணிகள் நடைபெறவில்லை என புகார் அளித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்த, சுயேச்சை எம்எல் ஏக்கள் சிவசங்கரன், கொளப்பள்ளி சீனிவாஸ் அசோக்.
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சுயேச்சை எம் எல் ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், கொளப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவில்லை, எம்எல்ஏ மேம்பாட்டு நிதி வழங்கவில்லை எனத் தெரிவித்து திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து முறையிட்டனர். அப்போது, ஆளும் கட்சியான பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தும், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மூன்று சுயேச்சை எம்.எல்.ஏக்களில், இரண்டு எம்எல்ஏக்கள் சிவசங்கரன், கொளப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசி வருகின்றனர்.

புதுவையில் சுயேச்சை எம்எல்ஏக்களான தங்களது தொகுதிகளில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் செய்யப்படவில்லை. தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக மனு அளித்து தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.