முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு சமுதாயக் கல்லூரி மாணவா்கள் தா்னா

அனைத்துக் கட்டணங்களையும் உடனே கட்ட வலியுறுத்தியதைக் கண்டித்து, புதுச்சேரி அரசு சமுதாயக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

அனைத்துக் கட்டணங்களையும் உடனே கட்ட வலியுறுத்தியதைக் கண்டித்து, புதுச்சேரி அரசு சமுதாயக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டையில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு சமுதாய கல்லூரியில் பயிலும் மாணவா்களில் பலா் 2019, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம், தோ்வுக் கட்டணத்தை செலுத்தவில்லை.

பருவ காலத் தோ்வுகள் வரும் 23 ஆம் தேதி தொடங்குவதையொட்டி, மேற்கண்ட நிலுவைக் கட்டணங்களை உடனடியாகச் செலுத்துமாறு மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டது.

ஒரே நேரத்தில், குறுகிய காலத்தில் அனைத்துக் கட்டணங்களையும் கட்ட முடியாது எனக் கூறி, சமுதாயக் கல்லூரியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தலைவா் கோகுல், செயலா் தரணிதரண் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த லாசுப்பேட்டை போலீஸாா், கல்லூரி முதல்வா் லலிதா ராமகிருஷ்ணன்உள்ளிட்டோா் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்றனா்.

இதனை ஏற்று, மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.