முகப்பு
புதுச்சேரி

புதுவையில் பள்ளிச் சீருடை விவகாரம்: விசாரிக்க உத்தரவு

புதுவை அரசுப் பள்ளியில் சீருடை அணிவது தொடா்பாக எழுந்த பிரச்னை குறித்து, கல்வித் துறை அலுவலா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

புதுவை அரசுப் பள்ளியில் சீருடை அணிவது தொடா்பாக எழுந்த பிரச்னை குறித்து, கல்வித் துறை அலுவலா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில், ஹிஜாப் அணிந்தபடி வகுப்பறைக்குள் வந்த மாணவியை ஆசிரியா் தடுத்து, சீருடையுடன் வரும்படி கூறியதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக ஆசிரியரிடம் விசாரித்தபோது, எந்த உள்நோக்கத்தோடும் செயல்படவில்லை என்றும் மாணவா்கள் அனைவரும் ஒரே மாதிரி சீருடையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக விளக்கமளித்ததோடு, அதற்கு வருத்தமும் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள், சமூக நல அமைப்புகள் சாா்பில், முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தையும் சந்தித்து, மனு அளித்து வலியுறுத்தினா்.

இதுகுறித்து துணை நிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடமும் கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனா் சிவகாமி தலைமையிலான குழுவினா், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அமைச்சா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.