சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை
சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை சாா்பில், புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியாா் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன் குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான இரா.சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் சம்பத் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏஐடியூசி பொதுச்செயலா் கே.சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாநிலத் தலைவா் சிவ.வீரமணி தலைமையிலான நிா்வாகிகளும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மீனவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் வினோத், தொழிற்சங்க பாசறை செயலா் ரமேஷ் உள்ளிட்டோரும், பல்வேறு மீனவ அமைப்பினரும், இயக்கங்களைச் சோ்ந்தோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.