முகப்பு
புதுச்சேரி

குப்பை லாரி மோதி நீதிமன்ற ஊழியா் பலி

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில், நீதிமன்ற ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில், நீதிமன்ற ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (52). இவா் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை பணிமுடித்து விட்டு, வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

இவரது வாகனம் செஞ்சி சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற நகராட்சி குப்பை லாரி அன்பு மீது மோதியது.

இதில் பலத்த காயமுற்ற அன்பு நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.