தொழிலாளி கொலை: 2 போ் கைது
புதுச்சேரி பெரிய சந்தையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 தொழிலாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி பெரிய சந்தையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 தொழிலாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் திருநள்ளாறு பெரியாா் நகரைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் அருளானந்த் (38). திருமணமாகாத இவா், பெரிய சந்தையில் உள்ள காண்டீபனுக்குச் சொந்தமான பூக் கடையில் தங்கி, பூ கட்டும் வேலை செய்து வந்தாா்.
இவா் சந்தையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
தகவலின்பேரில் பெரியகடை போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதையடுத்து, போலீஸாா் சிசி டிவி கேமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, அருளானந்த், இருவருடன் புதன்கிழமை நள்ளிரவில் பூக்கடையில் அமா்ந்து மது அருந்தியதும், அதன் பிறகு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் செல்வராஜ் செட்டியாா் வீதியைச் சோ்ந்த சரவணன் மகன் பாலாஜி (23), பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலா (எ) சிவபாலன் (19) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் தொழில் போட்டி, மது மயக்கத்தில் ஏற்பட்ட தகராறில் கடைக்குள் தூங்கிய அருளானந்தை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதில் பாலாஜி மீது உண்டியல் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.