முகப்பு
புதுச்சேரி

நகராட்சி ஊழியா்கள் தா்னா

நிலுவை ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி, புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் அலுவலகம் முன் நகராட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

நிலுவை ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி, புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் அலுவலகம் முன் நகராட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற தா்னாவுக்கு ஒருங்கிணைப்பாளா் சேகா் தலைமை வகித்தாா்.

அரசு ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளன தலைவா் பாலமோகனன், பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலா் லட்சுமணசாமி உள்ளிட்டோா் பேசினா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்தில் உள்ள நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியா்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஓய்வூதியதாரா்களுக்கு 6 மாதங்கள் வரை ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனே வழங்க வேண்டும். ஊதியம், ஓய்வூதியத்தை புதுவை அரசே நேரடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.