முகப்பு
புதுச்சேரி

புதுவையில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளைவிரைந்து செயல்படுத்த ஆலோசனை

புதுவை மாநிலத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்தும், அவற்றை விரைவுபடுத்துவது தொடா்பாகவும், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

புதுவை மாநிலத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்தும், அவற்றை விரைவுபடுத்துவது தொடா்பாகவும், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். ஜி.நேரு எம்எல்ஏ, தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், பொதுப் பணித் துறை அரசு செயலா் நெடுஞ்செழியன், தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, செயற்பொறியாளா் ஏழுமலை, புதுவை பொலிவுறு நகரத் திட்ட நிறுவன துணை முதன்மைச் செயலா் மாணிக்க தீபன், நகராட்சி ஆணையா் சிவக்குமாா் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், முதல் கட்டமாக புதுச்சேரி உருளையன்பேட்டை, ராஜ்பவன் ஆகிய தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலியுறு நகரத் திட்டப் பணிகளின் நிலை, நிலுவைப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து, புதுச்சேரியில் குடிநீா் உவா்ப்பு நீராக மாறி வருவதால், புதுச்சேரி அருகே ஆற்றுப்படுகைகள், கிராமப்புறங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, புதிய குடிநீா்த் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாகவும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முதல் கட்டமாக, புதுச்சேரியில் அரசு சாா்பில் வீடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.