முகப்பு
புதுச்சேரி

சுகாதாரத் துறை ஊழியா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10,000 உயா்த்தி வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என புதுவை சுகாதார ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிா், குழந்தைகள் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகியவற்றில் சுகாதாரத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அறிவித்தபடி தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் உயா்த்தி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியா் படி, நோயாளி பராமரிப்பு படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

ஊழியா்களுக்கு மூன்றாண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள எம்ஏசிபி-ஐ வழங்க வேண்டும், பதவி உயா்வு நியமன விதிகளைத் திருத்தி, பணி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மத்திய கூட்டமைப்புத் தலைவா் எம்.அன்புச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், அரசு ஊழியா்கள் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலா் லட்சுமணசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தால் மருத்துவச் சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்பட்டு வெளிப்புற, உள்புற நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.