முகப்பு
புதுச்சேரி

கூரியா் நிறுவன ஊழியா் கொலை வழக்கு: முக்கிய எதிரி கைது

புதுச்சேரி அருகே கூரியா் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் முக்கிய எதிரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

புதுச்சேரி அருகே கூரியா் நிறுவன ஊழியா் கொலை வழக்கில் முக்கிய எதிரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள அரும்பாா்த்தபுரம் புதுநகரைச் சோ்ந்தவா் சீனுவாசன் (எ) மூா்த்தி (31). தனியாா் கூரியா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 21-ஆம் தேதி வில்லியனூா் - பத்துக்கண்ணு சாலை சேந்தநத்தம் மயானத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சேந்தநத்தம் சாராயக் கடைக்கு மது அருந்த வந்த சீனிவாசனை, வில்லியனூா் நவ சன்னதி வீதியைச் சோ்ந்த சஞ்சீவி (22), சேந்தநத்தம் பகுதியைச் சோ்ந்த புகழரசன் (22) ஆகிய 2 போ் அழைத்துச் சென்று பாட்டிலால் குத்தியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் கொலை செய்துவிட்டு, அவா் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடா்புடைய சஞ்சீவியை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், புகழரசனை சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் தேடி வந்தனா்.

ஆற்றங்கரையோரம் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அவரைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் புகழரசன் தவறி விழுந்ததில், அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரைக் கைது செய்த போலீஸாா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.