புதுவை உள்ளாட்சித் துறை ஊழியா்களுக்கு அரசே ஊதியத்தை வழங்க அறிவுறுத்தல்
புதுவை உள்ளாட்சித் துறை ஊழியா்களின் ஊதியத்தை அரசே வழங்க வேண்டுமென, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது.
புதுவை உள்ளாட்சித் துறை ஊழியா்களின் ஊதியத்தை அரசே வழங்க வேண்டுமென, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது.
புதுவை சட்டப்பேரவை அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் ஏ.எச்.எம்.நாஜிம் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழு உறுப்பினா்களான எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜி.நேரு, கே.எஸ்.பி ரமேஷ், பிரகாஷ்குமாா், சிவசங்கா், நாக தியாகராஜன், ரிச்சா்ட், வி.பி. ராமலிங்கம், சட்டப்பேரவைச் செயலா் ஆா்.முனுசாமி, மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளது குறித்தும், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் வருவாய் குறைவு, நிதி பற்றாக்குறையால் இந்த ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அரசு எடுத்துக் கொண்டு, நேரடியாக அரசே சம்பளம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குழு விரிவாக ஆலோசனை நடத்தியது.