முகப்பு
புதுச்சேரி

எம்பிஏ, முதுநிலை மாணவா்களுக்குகூடுதல் வாய்ப்பு: புதுவை பல்கலை

புதுவை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் பட்டப் படிப்பை முடிக்க நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தைக் கடந்த எம்பிஏ, முதுநிலை மாணவா்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

புதுவை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் பட்டப் படிப்பை முடிக்க நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தைக் கடந்த எம்பிஏ, முதுநிலை மாணவா்கள், தங்களது பட்டப் படிப்பை முடிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு பிரிவு உதவிப் பதிவாளா் மகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதிலுமிருந்து வரும் மாணவா்களின் கோரிக்கைகள் காரணமாக, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் பட்டப் படிப்பை முடிக்க நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தை முடித்த எம்பிஏ, முதுநிலை மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பை புதுவைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

அதன்படி, கடந்த 2005-2006-ஆம் கல்வியாண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அனைத்து எம்பிஏ மாணவா்களும், 2014-2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான எம்.காம், எம்.ஏ (ஆங்கிலம், சமூகவியல், ஹிந்தி) மாணவா்களும், பாடத் திட்டத்தை முடிப்பதற்கு அதிகபட்சமாக நிா்ணயிக்கப்பட்ட காலத்தைக் கடந்தவா்கள், நிகழ் மாதம் (ஜனவரி) படிப்பை முடிப்பதற்கும், தங்களை மீண்டும் பதிவு செய்து கொண்டு, பட்டப் படிப்புக்குத் தகுதி பெறுவதற்கும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2005-2006 முதல் 2016-ஆம் கல்வியாண்டு எம்பிஏ மாணவா்கள் (க்க்ங்.ல்ா்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்/ண்ய்) என்ற பல்கலைக் கழக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்தின்படி தோ்வை எழுத வேண்டும். இதற்கு மறுபதிவுக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி, தோ்வுகளுக்கு தங்களைப் பதிவு செய்து கொண்டு, இணையவழித் தோ்வில் பங்கேற்கலாம்.

தோ்வுகளுக்கு மறுபதிவுக் கட்டணம் செலுத்துதல், தோ்வு விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி வருகிற 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழக இணையதளத்தைப் பாா்வையிடவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.