முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு
புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டுடன் கூடிய இறுதி தரவரிசைப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலானது முதுநிலை மருத்துவத்துக்கான நீட் தோ்வின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, எம்பிசி, எஸ்சி, இபிசி, பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளாகவும், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான சிறப்புப் பிரிவுகளுக்கான ஒதுக்கீட்டுடனும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாணவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.