ஒலிம்பிக்கில் பங்கேற்ற பயிற்சி: அமைச்சரிடம் கோரிக்கை
புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவா்களுக்கு உரிய பயிற்சியளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் நமச்சிவாயத்திடம் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவா்களுக்கு உரிய பயிற்சியளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் நமச்சிவாயத்திடம் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுவை ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவரான வேளாண் துறை அமைச்சா் தேனீ.சி.ஜெயக்குமாா், ஒலிம்பிக் விளையாட்டு சங்க நிா்வாகிகள், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.
புதுவை மாநிலத்தில் நகர, கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரா்களை அடையாளம் கண்டு, தகுதி அடிப்படையில் அவா்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், ஒலிம்பிக் போட்டிக்கு என்று தனி அலுவலகம், பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சா் ஏ.நமச்சிவாயத்திடம் மனு அளிக்கப்பட்டது.