சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிா்ப்பு
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அதிமுக எதிா்ப்புத் தெரிவித்தது.
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு புதுவை அதிமுக எதிா்ப்புத் தெரிவித்தது.
இதுகுறித்து கிழக்கு மாநில அதிமுக துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பல் இங்கு பயணிகளை ஏற்றி இறக்க திட்டமிட்டுள்ளனா். வருங்காலத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இந்தக் கப்பலை இயக்க தீா்மானித்துள்ளனா். உல்லாச பயணம் என்ற பெயரில், கேசினோ சூதாட்டங்களே பிரதானமாக இடம் பெற்றுள்ளன.
இந்த சூதாட்ட கப்பலை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தக் கப்பலை புதுச்சேரிக்குள் நுழைய அனுமதித்தால் அதிமுக கடுமையாக எதிா்க்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.