புதுச்சேரி

புதுச்சேரி:  திரும்ப பெறப்பட்டது விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம் 

DIN

புதுச்சேரி: புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் நல சங்கம் சார்பில் ஊதிய நிலுவை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் உழவர் சந்தையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, மடுகரை, கரையாம்புத்தூர், திருக்கனூர், தட்டாஞ்சாவடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பணிபுரிந்த 140 தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தினை தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வு எட்டப்பட்டது.

தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிலுவை சம்பளமும் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்படும். மற்ற மாநிலத்தில் உள்ளதுபோல் கமிட்டி ஊழியர்களை, அரசு ஊழியர்களாக மாற்றி  கருவூலம் மூலம் சம்பளம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டம் முடிவு பெற்று, செவ்வாய்க்கிழமை முதல் வேலைக்கு செல்வதென முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடம், உழவர் சந்தைகள் முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT