புதுச்சேரி

புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.92% பேர் தேர்ச்சி

DIN

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் மாநில கல்வித்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார். 

புதுச்சேரியில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விணை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 16,515 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 15,346 பேர் தேர்ச்சி்பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி்விகிதம் 92.92% தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் 85.01% தேர்ச்சி பெற்றது. 

அனைத்துப் பள்ளிகளும்( மொத்தம் 292) சேர்த்து 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மொத்தம் 114 பள்ளிகள் ஆகும். 12 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 102 மாணவ-மாணவிகள் தனித்தனி பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். 

கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் கூடுதலாக வந்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும், நிகழாண்டு உயர்வகுப்பு சேர்க்கைக்கான இடவசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றார் கல்வி அமைச்சு நமச்சிவாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT