முகப்பு
புதுச்சேரி

ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் யோகா ஆசானங்கள் செய்து அசத்திய இளைஞர்

புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் யோகா ஆசானங்களை செய்து அசத்தியுள்ளார்.

Updated On : 22 ஜூன் 2022, 4:55 pm IST
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் யோகா ஆசானங்களை செய்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் சென்னையில்  டெம்பிள் அட்வென்சர் என்ற பெயரில் ஆழ்கடல்பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் அரவிந்த். உள்நாட்டவரும், வெளிநாட்டவரும், சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி காந்தி சிலை அருகில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் 60 அடி ஆழத்தில் இவர் யோகா பயிற்சி மேற்கொண்டார்.

கடலுக்கு அடியில் தலை கீழாக நின்றும், அமர்ந்தும், ஒற்றை காலில் நின்றும் அரவிந்த் யோகாசனங்களை செய்து அசத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.