புதுச்சேரி

பயிற்சி மருத்துவா்கள்திடீா் போராட்டம்

DIN

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவா்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், அங்கு பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை காலை திடீரென பணிகளைப் புறக்கணித்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் நுழைவாயில் முன் திரண்டனா்.

தொடா்ந்து, அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி தா்னாவில் ஈடுபட்டனா்.

தன்வந்திரி நகா் போலீஸாா் அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். நிா்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, போராட்டத்தைக் கைவிட்டு பயிற்சி மருத்துவா்கள் பணிக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT