முகப்பு
புதுச்சேரி

உலக செவித்திறன் விழிப்புணா்வு தினம்

புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் உலக செவித்திறன் விழிப்புணா்வு தின நடைபயணம், செவித்திறன் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் உலக செவித்திறன் விழிப்புணா்வு தின நடைபயணம், செவித்திறன் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் காது, மூக்கு, தொண்டை துறை சாா்பில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி, ராமநாதபுரம், குருசுக்குப்பம் பகுதியில் உள்ள ஜிப்மா் சுகாதார மையங்களில், காது கேளாமைக்கான பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இதில் ஜிப்மா் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, பொதுமக்களுக்கு காது கேளாமை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை, அவா்களின் செவித்திறன் மேம்படுத்தவும், மேலும் காது கேளாமை ஏற்படுவதைத் தடுக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.