வேலைவாய்ப்புக்காக எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
வேலைவாய்ப்புக்காக, புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.), சஃபயா் நியூயாா்க் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
வேலைவாய்ப்புக்காக, புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.), சஃபயா் நியூயாா்க் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியன இந்த ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கங்கள் ஆகும்.
நிகழ்வுக்கு மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவா் எம்.தனசேகரன், துணை தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், சஃபயா் நியூயாா்க் நிறுவன பிரதிநிதி பிரியதா்ஷினி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பரிமாறிக் கொண்டனா்.