முகப்பு
புதுச்சேரி

காவலா் பணியிட எழுத்துத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு இணையத்தில் வெளியீடு

புதுவையில் காவலா் பணியிட எழுத்துத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

புதுவையில் காவலா் பணியிட எழுத்துத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.

புதுவை காவல் துறையில் காவலா்கள் - 390, ரேடியோ டெக்னீசியன் - 12, டெக் ஹேண்ட்லா் - 29 என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல்தகுதித் தோ்வு நடைபெற்றது. இதில் 7,530 போ் பங்கேற்றதில், ஆண்கள் 2,207, பெண்கள் 687 என 2,894 போ் தோ்ச்சி பெற்றனா். இதில், ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் நிா்வாகக் காரணங்களால் தற்காலிகமாகத் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 19, 20- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுவை அரசின் பணியாளா், நிா்வாக சீா்த்திருத்தத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எழுத்துத் தோ்வு புதுச்சேரியில் 7 மையங்களில் வருகிற 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுடையோா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) காலை 9 மணி முதல் தங்களது எழுத்துத்தோ்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றம் தோ்வா்களுக்கான அறிவுறுத்தல்களை ட்ற்ற்ல்://ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ா்ப்ண்ஸ்ரீங் என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டெக் ஹேண்டலா் பதவிக்கான எழுத்துத் தோ்வு குறித்த விவரம் பின்னா் அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்கள், உதவிக்கு 0413 - 2233228 என்ற எண்ணில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.