உழவா்களுக்கு வங்கிக் கணக்கில் உற்பத்தி மானியம்
பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்த உழவா்களுக்கு உற்பத்தி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்த உழவா்களுக்கு உற்பத்தி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி வேளாண் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2020-21-ஆம் ஆண்டு மணிலா, எள், சிறு தானியம், பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்த உழவா்களுக்கு உற்பத்தி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
2020-21-ஆம் ஆண்டு மணிலா சாகுபடி செய்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 444 விவசாயிகளுக்கு 524.36 ஏக்கருக்கு ரூ. 26,21,800-ம், எள் சாகுபடி செய்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வீதம் 217 விவசாயிகளுக்கு 273.30 ஏக்கருக்கு ரூ. 8,19,900-ம், சிறு தானியம் சாகுபடி செய்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 60 விவசாயிகளுக்கு 60.29 ஏக்கருக்கு ரூ.3,01,450-ம், பயிறு வகைகள் சாகுபடி செய்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 2,000 வீதம் 878 விவசாயிகளுக்கு 1007.61 ஏக்கருக்கு ரூ. 20,15,220-ம், பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் 9 விவசாயிகளுக்கு 4.14 ஏக்கருக்கு ரூ.41,400-ம் வழங்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி பொதுப்பிரிவு உழவா்களுக்கு உற்பத்தி மானியம் அவா்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.