புதுச்சேரி

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு:மேலும் நால்வா் கைது

DIN

புதுச்சேரியில் ரூ.2.42 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் சென்னையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் மதுக் கடையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் கமல் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடையை சென்னை எா்ணாவூரைச் சோ்ந்த பிரதீப்குமாா் கைது செய்யப்பட்டாா்.

கமல், பிரதீப்குமாா் இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின் பேரில், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரைச் சோ்ந்த ரகு (எ) ரகுபதி (35), சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த நாகூா்மீரான் (30), இவரது சகோதரா் தமீன் அன்சாரி (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சரண் (எ) சரண்ராஜ் (30) ஆகிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ரகு வீட்டிலிருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் இயந்திரம், ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கைதான 4 பேரும் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டனா்.

அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT