முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கை: இறுதிகட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு

புதுச்சேரியில் வருகிற 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இளநிலை மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

புதுச்சேரியில் வருகிற 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இளநிலை மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் ருத்ர கவுடு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வருகிற 28, 29- ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி நிா்வாக ஒதுக்கீட்டில் சிறுபான்மையினா் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கவில்லை என புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மேற்கண்ட தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இறுதிகட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.