கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்க அழைக்க
கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்துக்காக, ஒப்பந்ததாரா்கள் ஏப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.
கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்துக்காக, ஒப்பந்ததாரா்கள் ஏப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த கா்ப்பிணிகளுக்கு கருவுற்ற 3,, 5-ஆவது மாதத்தில், முன்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகமும், பாலூட்டும் தாய்மாா்களுக்கு, குழந்தை பிறந்தவுடன், குழந்தை நல பெட்டகமும் வழங்கப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரும் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குள் தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.