முகப்பு
புதுச்சேரி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை உள் குத்தகைக்குவிட்டு மோசடி: 4 போ் மீது வழக்கு

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, உள் குத்தகைக்குவிட்டு மோசடியில் ஈடுபட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, உள் குத்தகைக்குவிட்டு மோசடியில் ஈடுபட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி சாரம் டி.ஆா். நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுகுமாா் (65). ஓய்வுபெற்ற வங்கி ஊழியா். இவா் 2016- ஆம் ஆண்டு பாக்கமுடையான்பட்டு அன்னை தெரசா நகா் அன்னை வீதியிலுள்ள தனது வீட்டை வெங்கட்டா நகரில் வசிக்கும் உழவா்கரை பாஜக இளைஞரணி நிா்வாகி பிறைசூடன் (30) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.

அப்போது, பிறைசூடன் தனது தொழில் கூட்டாளிகளான செல்லபெருமாள்பேட் மோகன்ராஜ் (30), புவனா (36) உள்ளிட்டோா் அந்த வீட்டினை பயன்படுத்தி வந்ததாகவும், பின்னா் அந்த வீட்டை சுந்தா் என்பவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு குத்தகைக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.

வாடகை ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் சுகுமாா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, உள் குத்தகைக்கு விட்டது குறித்து தெரியவந்தது. புகாரின்பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் விசாரணை நடத்தி, பிறைசூடன், மோகன்ராஜ், புவனா, சுந்தா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் தங்கமணியின் வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி செய்யப்பட்ட வழக்கில் பிறைசூடன், மோகன்ராஜ் ஆகிய 2 பேரும் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.