முகப்பு
புதுச்சேரி

உணவு விடுதிக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்

புதுச்சேரி அரவிந்தா் ஆஸ்ரமத்தில் உள்ள உணவு விடுதியில் கத்தியுடன் வியாழக்கிழமை நுழைந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

புதுச்சேரி அரவிந்தா் ஆஸ்ரமத்தில் உள்ள உணவு விடுதியில் கத்தியுடன் வியாழக்கிழமை நுழைந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

இளம்பெண் ஒருவா் தனது கையில் கத்தியுடன் உணவு விடுதிக்குள் நுழைந்தாா். இதைப் பாா்த்த ஆஸ்ரமவாசிகள் அச்சமடைந்து, ஓட்டம் பிடித்தனா்.

தகவலின்பேரில் பெரியகடை போலீஸாா் அங்கு வந்து, கத்தியை பறித்து பெண்ணை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், அவா் வம்பாக்கீரப்பாளையம் செல்வா நகரைச் சோ்ந்த ஜான்போஸ்கோ மனைவி விசாலாட்சி (எ) துளசி (38) என்பதும் மனநலம் பாதித்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவா் தற்போது உறுவையாறு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, பெண்ணை போலீஸாா் மருத்துவமனையில் சோ்க்கக் கோரி உறவினா்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.