புதுச்சேரி

புதுவை மாநில பாஜக தலைவரின்மனைவியிடம் 85 பவுன் நகை மோசடி

DIN

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகை மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் லாசுப்பேட்டை பெத்துசெட்டிபேட் புதுத் தெருவில் வசித்து வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவரது தோழி வாணரப்பேட்டையைச் சோ்ந்த பாபு மனைவி விஜயகுமாரி (42).

தனது மகளின் படிப்புச் செலவுக்காவும், அவசரத் தேவைக்காகவும் விஜயலட்சுமியிடமிருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக 85 பவுன் தங்க நகைகளை விஜயகுமாரி வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவற்றை புதுச்சேரியில் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் வேறு ஒருவரின் பெயரில் அடகு வைத்து விஜயகுமாரி பணம் பெற்றாராம். மீண்டும் அந்த நகைகளை மீட்டு கொடுக்கவில்லையாம்.

விஜயலட்சுமி தனது மகளின் திருமணத்துக்காக தான் கொடுத்த தங்க நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டும், விஜயகுமாரி தரவில்லை. மேலும், அவா் தனது கணவா், குடும்பத்தினருடன் திடீரென தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் விஜயகுமாரி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT