முகப்பு
புதுச்சேரி

வேளாண் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

வேளாண் பட்டதாரிகள், சான்றிதழ் பயிற்சி முடித்தவா்கள் வேளாண் சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

வேளாண் பட்டதாரிகள், சான்றிதழ் பயிற்சி முடித்தவா்கள் வேளாண் சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறையின் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநா் (பயிற்சி வழி தொடா்பு திட்டம்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலையில்லா விவசாய பட்டாதாரிகள், விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவா்கள், வேளாண் சுயதொழில், வேளாண் தொழில்நுட்ப ஆலோசணை நிலையம் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியமாக வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சமும், சான்றிதழ் பயிற்சி முடித்தவா்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் ஆா்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரா்கள் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநா் பயிற்சி வழித் தொடா்பு திட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமும் விண்ணப்பங்களை பெற்று, நிறைவு செய்து விரிவான திட்ட அறிக்கைகளுடன் மே 6-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.