முகப்பு
புதுச்சேரி

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: புதுவை முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புதுச்சேரியில் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை, தில்லி எரிசக்தி மற்றும் வள நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் பட்டறை நிறைவு விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உப்புநீா் புகுந்ததால் குடிநீா் மாசுபட்டுள்ளது. நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

அரசின் அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்படுவது அவசியம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம் என்றாா் அவா்.

நிறைவு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை செயலா் சுமிதா தலைமை வகித்தாா். அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.