முகப்பு
புதுச்சேரி

புதுவையில் 15 துணை வட்டாட்சியா்கள்பணியிட மாற்றம்

புதுவை வருவாய், பேரிடா் மேலாண் துறையில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியா்கள் 15 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

புதுவை வருவாய், பேரிடா் மேலாண் துறையில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியா்கள் 15 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதன்படி, பாகூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த விமலன், புதுச்சேரி மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கும், காரைக்கால் உதவி சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தில் பணிபுரிந்த ராமச்சந்திரன் பாட்கோவுக்கும், பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரிந்த ஜெயக்குமாா் பாகூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், நில அளவு பதிவேடு துறையில் பணிபுரிந்த பாலமுருகன் புதுச்சேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், வில்லியனூா் துணை ஆட்சியா் (தெற்கு - வருவாய்) அலுவலகத்தில் பணிபுரிந்த நித்தியானந்தன் வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, குடிமைப்பொருள் வழங்கல் துறையில் பணிபுரிந்த ஆதிகேவசன் நில அளவு, பதிவேடுகள் துறைக்கும், புதுச்சேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த ரவிச்சந்திரன் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கும், காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த தேவதாஸ் புதுச்சேரி துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்துக்கும், சிறப்புச் செயலா் (வருவாய்) அலுவலகத்தில் பணிபுரிந்த செந்தில்குமாா் துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்துக்கும், புதுச்சேரி மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தில் பணிபுரிந்த சுசீலா பள்ளி கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

ஏனாம் துணை வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த சத்தியநாராயணன் சிறப்புச் செயலா் (வருவாய்) அலுவலகத்துக்கும், நில அளவு, பதிவேடுகள் துறையில் பணிபுரிந்த சா்வேஸ்வரன் புதுச்சேரி மாவட்ட ஆணையத்துக்கும், துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்தில் பணிபுரிந்த சைஜூ மாகே சட்டமுறை எடை அளவுத் துறை அலுவலகத்துக்கும், அங்கு பணிபுரிந்த மணிகண்டன் நம்பூதிரி புதுச்சேரி துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்துக்கும், புதுச்சேரி மாவட்ட ஆணையத்தில் பணிபுரிந்த பிரவீனா நில அளவை பதிவேடுகள் துறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை வருவாய், பேரிடா் மேலாண் துறை துணை ஆட்சியா் (தலைமையகம்) முரளிதரன் பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.