25.3.1976: திருமண வயதை உயர்த்த பரிசீலனை - இந்திரா காந்தி
திருமண வயதை உயர்த்த பரிசீலனை செய்வதாக பிரதம மந்திரி இந்திரா காந்தி தெரிவித்தது பற்றி...
புதுடில்லி, மார்ச். 23 - திருமண வயதைப் பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உயர்த்துவது பற்றி சர்க்கார் சிந்தித்து வருகிறது என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி கூறினார்.
குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஸ்வீடன் நாட்டு பத்திரிகை ஆசிரியர் திருமதி லிட்டில் பிஷர் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். உடனடியாகப் பலன் கிடைக்கும் பொருட்டு தூண்டுதலுடன் ஓரளவு நிர்ப்பந்தத்தையும் பிரயோகிப்பது பற்றிப் பரிசீலிப்பதாக பிரதம மந்திரி குறிப்பிட்டார்.
நகர்ப்புறங்களிலும், தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளிலும் சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக காலம் தாழ்த்திய திருமணங்கள் நடப்பதாகவும், ஆனால் பின்தங்கிய பகுதிகளில் சமூக சீர்திருத் தச் சட்டத்தை அமலாக்குவது கடினமாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
Advertisement
Advertisement
வரிச் சலுகை - மோட்டார் வரி, வணிகப் பயிர் வரிகள் குறைப்பு
புதுடில்லி, மார்ச், 24 - 1976-77 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று லோக்சபையில் நிறைவேறியது. ஓராண்டில் ரூ. 2 கோடி அளவுக்கு வருவாயை இழக்கக் கூடிய வரிச் சலுகைகளை நிதி மந்திரி சி. சுப்ரமண்யம் அறிவித்தார்.
விவாதத்துக்கு பதிலளிக்கையில், நிதி மந்திரி சுப்ரமணியம் அறிவிக்கப்பட்ட சலுகைகள் கணிசமானதென்று கூறினார். தமிழ்நாட்டின் நிதி நிலவரத்தையும், ரூ. 200 கோடிக்கு அதிகரிக்கப்பட்ட திட்ட முதலீட்டுக்கான நிதி வசதிகளை காண வேண்டிய கட்டாய நிலை இருப்பதையும் கருதி வரிச் சலுகைகள் பெருந் தொகையாகும் என்று சுப்ரமணியம் கூறினார்:
வரிச் சலுகைகள் விவரம்
1. வெளியூர் சர்வீஸ் மோட்டார் வண்டிகள் வரி குறைக்கப்படும். கால் வருஷத்துக்கு ஆசனம் ஒன்றுக்கு ரூ. 225 தீர்வை உத்தேசிக்கப்பட்டிருந்தது, இத்தீர்வை கால்ஆண்டுக்கு ஆசனம் ஒன்றுக்கு ரூ. 215 ஆக்கப்படுகிறது.
2. திராட்சை, கரும்பு, தோட்டங்கள் (தேயிலை, காப்பி, ரப்பர் போன்றவை) வெற்றிலை, மஞ்சள் உத்தேச தீர்வை ஏக்கருக்கு ரூ. 25 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது ஏக்கருக்கு ரூ. 20 ஆகிறது.
3. புகையிலை, மிளகாய், பாசன வசதியுள்ள நிலங்களில் பயிரான பருத்தி, பாசன வசதியுள்ள நிலங்களில் பயிரான வேர்க்கடலை முதலிய ரொக்கப் பயிர்களுக்கு "செஸ்" தீர்வை ஏக்கருக்கு ரூ. 15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அது குறைக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ. 12.5 ஆகிறது.
இந்த சலுகைகளின் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 2 கோடி வருமானத்தை இழக்க வேண்டியிருக்குமென்றும், இக் கணிசமான சலுகைகளை மெம்பர்கள் வரவேற்பார்கள் என்று நம்புவதாகவும் நிதி மந்திரி சுப்ரமண்யம் கூறினார். ...
Prime Minister Indira Gandhi stated that the government is considering raising the marriage age to 18 for women and 21 for men.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.