காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்க மாட்டாா்கள்: வே.நாராயணசாமி
பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டாா்கள் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டாா்கள் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி இந்தியாவின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டவா். அவரை இழந்த எங்களால் பேரறிவாளன் விடுதலை தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடையவா்களை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டா்கள் என்ற முறையில் நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்றாா் வே.நாராயணசாமி.