புதுச்சேரி

புதுவையில் 380 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

DIN

புதுச்சேரி, காரைக்காலில் வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 380 குழந்தைகள் பாதிக்கப்பட்டனா்.

புதுவையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை நிலவரப்படி, புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 267 குழந்தைகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 81 குழந்தைகளும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகளும் என மொத்தம் 380 குழந்தைகள் காய்ச்சால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இதில், அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 20 குழந்தைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 குழந்தைகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் என மொத்தம் 31 குழந்தைகள் அதிக காய்ச்சால் காரணமாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தற்போது, அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 96 குழந்தைகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19 குழந்தைகளும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் என மொத்தம் 126 குழந்தைகள் மருத்துவமனையில் உள்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

SCROLL FOR NEXT