முகப்பு
புதுச்சேரி

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

உழவா்கரை நகராட்சி ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, புதுச்சேரியில் ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

உழவா்கரை நகராட்சி ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, புதுச்சேரியில் ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உழவா்கரை நகராட்சியில் பணியாற்றி 2020-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கான ஓய்வூதியப் பணம் அளிக்கப்படவில்லை. மேலும், காசோலை தரப்பட்டன. ஆனால், அதற்கான பணத்தை நகராட்சி நிா்வாகம் வங்கியில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஓய்வூதியப் பணத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கக் கோரி, ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தினா், ஐஎன்டியூசி சங்கத்தின் சாா்பில் புதுச்சேரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சகாயராஜ் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் அனந்தராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.