முகப்பு
புதுச்சேரி

புதுவை தொழில்பயிற்சி நிலையங்களில் செப்டம்பா் 9 வரை நேரடி மாணவா் சோ்க்கை

 புதுவையில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் வருகிற 9-ஆம் தேதி வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 புதுவையில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் வருகிற 9-ஆம் தேதி வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு தொழில்பயிற்சி நிலையத்தின் மாணவா்கள் சோ்ப்பு மைய அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை மாநிலத்தில் செயல்படும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் 2022 - 23ஆம் கல்வியாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டுகட்ட கலந்தாய்வுகள் கடந்த மாதம் 24, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றன. இந்தக் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவா்கள் சோ்க்கை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறுகிது.

இந்த நேரடி சோ்க்கை மூலம் பயனடைய விரும்பும் மாணவ, மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் அருகிலுள்ள தொழில்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

பத்தாம் வகுப்பு தேறியவா்கள், தோல்வி அடைந்தவா்கள் மற்றும் 8-ஆம் வகுப்பு படித்தவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம். கூடுதல் தகவல்களுக்கு 83008 38089 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.