புதுச்சேரி

ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம்

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் பெருமாள் கோயிலில் 51-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து, கடந்த 9 நாள்களாக லட்சுமி ஹயக்ரீவருக்கு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. 10-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவா் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT