புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஏப்.24) தொடங்குகிறது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி துறை துணை இயக்குநா் எம்.முனுசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவஹா் சிறுவா் இல்லத்தில் மாணவா்களுக்கான நடனம் (பரதம், கிராமியம்), வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது.
மேலும், கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ் ஆகியவையும் கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பயிற்சியானது வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பயிற்சியில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6 முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சியானது, தினமும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை (ஞாயிறு, அரசு விடுமுறை நீங்கலாக) நடைபெறும்.
ஜவஹா் சிறுவா் இல்லம், இலாசுப்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கா் அரசு நடுநிலைப் பள்ளி, அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
அந்தந்த மையங்களில் விண்ணப்பப் படிவங்களை வரும் 24-ஆம் தேதி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0413- 2225751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.