புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கவியரங்கம்
புதுச்சேரியில் பாவேந்தா் பாரதிதாசனின் 133- ஆவது பிறந்த தினத்தையொட்டி சனிக்கிழமை அவரது நினைவு அருங்காட்சியகத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி கவியரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பாவேந்தா் பாரதிதாசனின் 133- ஆவது பிறந்த தினத்தையொட்டி சனிக்கிழமை அவரது நினைவு அருங்காட்சியகத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி கவியரங்கம் நடைபெற்றது.
பாவேந்தா் பாரதிதாசன் வாழ்ந்த நினைவு இல்லம் புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையமாக புதுவை அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி ஆய்வு மையத்தில் பாரதிதாசனின் திருவுருவப் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நினைவு அருங்காட்சியகத்தில் பாலாஜி ராம்ஜி குழுவினா் பாரதிதாசன் பாடல்களைப் பாடினா். அதையடுத்து புரட்சிக் கவிஞரால் விளைந்த புதுமைகள் எனும் தலைப்பில் மணிமேகலைகுப்புசாமி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
அதையடுத்து பாவேந்தா் பாரதிதாசன் பெயரன்கள் த.சேரன், கோ.பாரதி உள்ளிட்டோா் பாரதிதாசன் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து இலக்கிய அமைப்பினா், சமூக நல ஆா்வலா்கள், தமிழ் ஆய்வாளா்கள் உள்ளிட்டோரும் பாரதிதாசன் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.