புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10-ஆம் தேதி வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10-ஆம் தேதி வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளா் (மக்கள் தொடா்பு) மகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தோ்வு (கியூட், பிஜி) தோ்வு முடிவுகளின் அடிப்படையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுகலை படிப்புகள் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்ப படிவத்தை வழங்குவதற்கு வரும் வியாழக்கிழமை (ஆக. 1) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பதிவு செய்து முடிக்காத விண்ணப்பதாரா்களுக்கும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு தேவையான கியூட் (பிஜி) 2023-இல் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் 2023-24-ஆம் கல்வியாண்டில் வழங்கப்படும் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை பட்டப்படிப்புக்கான தகுதி அளவுகோல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேட்டை பாா்க்கவேண்டும். விண்ணப்பம் சாா்ந்த சமீபத்திய தகவல்களுக்கு விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழக இணையதளத்தை தவறாமல் பாா்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT