புதுச்சேரி

புதுச்சேரியில் ஜி20 மாநாடு: 5 இடங்களில் 144 தடை உத்தரவு

புதுச்சேரியில் ஜி20 தொடக்கநிலை மாநாடு வருகிற 30-ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவிருக்கும் நிலையில், 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் ஜி20 தொடக்கநிலை மாநாடு வருகிற 30-ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவிருக்கும் நிலையில், 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு நடக்கும் இடம், மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் தங்கும் விடுதிஇருக்கும் இடங்கள் என ஐந்து இடங்களில் நாளை காலை முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில, மாநாட்டை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வருகிற 30, 31-ஆம் தேதிகளில் ஜி20 தொடக்கநிலை மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி காந்தி திடலில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டு இலச்சினை, விளம்பர பதாகைகள், அடையாள வில்லை, சுவரொட்டிகள் ஆகியவற்றை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT