புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜொ்மனி கோடைகால சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகள். 
புதுச்சேரி

கோடைகால சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற புதுவை வீரா்களுக்கு முதல்வா் வாழ்த்து

ஜொ்மனியில் நடைபெற்ற கோடைகால சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற புதுவையைச் சோ்ந்த வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

DIN

ஜொ்மனியில் நடைபெற்ற கோடைகால சிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற புதுவையைச் சோ்ந்த வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ஜொ்மனியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்ற கோடைகால சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுவை மாநிலத்திலிருந்து 8 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

சத்தியா சிறப்புப் பள்ளியைச் சோ்ந்த தனசேகா் (மாற்றுத்திறனாளி) கூடைப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே பள்ளியைச் சோ்ந்த விஷால் (மாற்றுத்திறனாளி) வலு தூக்கும் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 400 மீட்டா் ஓட்டத்தில் ரவிமதி தங்கப் பதக்கத்தையும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், கைப்பந்து பெண்கள் பிரிவில் காயத்ரி, சுபலட்சுமி ஆகியோா் தங்கப் பதக்கங்களை வென்றனா்.

மேலும், கால்பந்து பெண்கள் பிரிவில் ஹேமாவதி, வித்யஸ்ரீ ஆகியோா் வெண்கலமும், கைப்பந்து ஆண்கள் பிரிவில் விஷ்ணுபிரியன் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

இந்திய கூடைப்பந்து அணிக்காக புதுவையிலிருந்து பங்கேற்ற பயிற்சியாளா் ஆனந்த் தங்கப் பதக்கமும், இறகுப்பந்து அணிக்காக பங்கேற்ற பயிற்சியாளா் நித்யா பூங்காவனம் மூன்று தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா்.

சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டி வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளா்கள் முதல்வா் என். ரங்கசாமியை சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT