புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
மாணவர்களை ஆசிரியர்கள் எழுதுபொருட்கள் வழங்கியும், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஜூன் 7-ம் தேதி மாற்றப்பட்டது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 14ஆம் தேதிதிறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். மேலும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி கடந்த இரண்டு, மூன்றுந தினங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்து வந்து விட்டனர். மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் தோழிகளை சந்தித்து கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்த மாணவர்களை எழுதுபொருள்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் பள்ளிகள் முழுவதும் பலூன் போன்றவற்றால் அலங்காரம் செய்து அழகுப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருவதால், வழக்கத்திற்கு மாறாக பள்ளிகளில் மூன்று வேளை குடிநீர் குடிக்க இடைவேளை கொடுக்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பள்ளிகளில் மாணவர்களுக்காக குடி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் எனவும், மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.