ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கு கட்டணமுறை நிறுத்திவைப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கான கட்டணமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகளுக்கான கட்டணமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டண சிகிச்சை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜிப்மர் மருத்துவமனையில் உயர்த்தப்பட்ட உயர் சிகிச்சைகளுக்கான சேவை கட்டணம் இன்று முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரில் நோயாளிகளுக்கு பல்வேறு வசதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. அரசுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நோயாளிகளுக்கு விதிமுறைப்படி வசதிகள் செய்து தரப்படுகின்றன. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடா்ந்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
இலவச மருந்தகம் தவிர அம்ரித் மருந்தகம், தனியாா் மருந்தகம் ஆகியவையும் ஜிப்மரில் செயல்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கான சிகிச்சை, சேவையில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மா் நிா்வாகம் உறுதியாக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.